வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு மிரட்டல்! மோப்ப நாய்களுடன் களமிறங்கிய பொலிஸார்!

22shares

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் இன்றைய தினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த தகவல் கிடைக்கபெற்ற நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு மோப்பநாய் சகிதம் வருகைதந்த வவுனியா பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்கள், பொதுமக்கள் சோதனை மேற்கொள்ளபட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடற்படையினரால் வவுனியா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்று நாளையதினம் ஆளுநரது பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.