நுவரெலியாவில் பதற்றம்! உயிரிழந்த பெண்ணுடன் மாயமான இருவர்! தீவிர தேடுதலில் பொலிஸார் மற்றும் பொதுமக்கள்!

290shares

நுவரெலியா - வட்டவலை பிட்டவீன் விக்டன் தோட்டப் பகுதியில் உயிரிழந்த தாயின் சடலத்துடன் மகனும் 13 வயதுடைய பேரப்பிள்ளையும் காணாமல் போயுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதால் குறித்த பகுதியில் பதற்றமான நிலை காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

சடலத்துடன் காணாமல் போயுள்ள இருவரையும் தேடும் பணியில் வட்டவலை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். நுவரெலியா - வட்டவலை விக்கடன் தோட்டபகுதியில் சுகயினம் காரணமாக 70வயதுடைய ராகை என்ற தாய் கடந்த 09 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தாயின் சடலத்தை மகன் கொண்டு சென்ற போது காணாமல் போயுள்ளதாக நேற்று செவ்வாய்க்கிழமை வட்டவலை பொலிஸ் நிலையத்தில் விக்டன் தோட்டமக்கள் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வாக்குமூலம் வழங்கியுள்ள உயிரிழந்த பெண்ணின் மருமகள், தனது கணவர் சடலத்தை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றதாகவும் இதுவரையிலும் சடலத்தை எங்கு கொண்டு சென்றார் என்ன செய்தார் என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கணவருடன் 13 வயதுடைய மகனும் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் சுகயினமுற்றிருந்த நிலையில் அவரை அவரது மகன் கொலைசெய்திருக்கலாம் என தோட்ட மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சடலத்தையும் மகன் மற்றும் பேரபிள்ளையையும் பொலிஸார் பொதுமக்கள் இணைந்து தேடிவருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...