கோட்டாபய ராஜபக்ஷ அரச தலைவர் அல்ல! புதிய தகவல் வெளியிட்ட கே.டி!

36shares

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச அரசியல் தலைவர் கிடையாது என ஜே.வி.பி.யின் அரசியல் பீட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் அரசியல் தலைமையுடைய ஒர் வேட்பாளரை களமிறக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோட்டாபாய ராஜபக்ச அரசியல் தலைமைத்துவம் கொண்டவராக கருதப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சஜித் பிரேமதாச இதுவரையில் எந்தவொரு தேசிய செயற்பாடுகளையும் மேற்கொண்டதில்லை எனவும், இலங்கை என்பது ஹம்பாந்தோட்டை என அவர் கருதி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...