எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்த பேச்சுக்கே இடமில்லை- மஹிந்தவாதிகள் திடசங்கற்பம்!

15shares

எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் மொட்டு சின்னத்தை மாற்றப்போவதில்லையென பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த யாபா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அனைத்து சமூகங்களையும் பாதுகாக்க உறுதியான கட்சி பொதுஜனபெரமுனவே என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சின்னத்தை மாற்றுமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சி கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...