கோட்டா ஆட்சிக்கு வந்தால் மீளவும் வெள்ளைவான் கலாசாரம்? தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

11shares

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலைதூக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்துவரும் பிரசாரங்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என மஹிந்தவாதி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில்-மைத்திரி அரசாங்கம் கடந்த நான்கரை வருடங்களாக தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள மஹிந்தானந்த அளுதகமகே, பெருந்தோட்டத்துறை தொடக்கம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் வரை அனைவரது பிரச்சினைக்குமான தீர்வு கோட்டாபய ராஜபக்சவிடம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு அண்மைக்காலமாக சரிந்துவருவதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, 2010 ஆம் ஆண்டில் யுத்தத்தை வழிநடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் இம்முறை கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...