அவசர சிகிச்சைப்பிரிவில் மகிந்த? தீயாக பரவும் செய்தி!

1076shares

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீர்சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுவாச உபகரண உதவி பொருத்தப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பிலான புகைப்படங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. எனினும் இந்த செய்தி போலியானதென தெரிவிக்கப்படுகிறது.

இவர் வலமை போன்று அரசியல் செயற்பாடுகளிலும் நாமல் ராஜபக்ஸவின் திருமண ஏற்பாடுகளை செய்வதிலும் ஈடுபட்டுள்ளார் என மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றது.

மகரகம் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற பொதுஜனபெரமுனவின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளாத நிலையில் இந்த செய்தி பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
loading...