மைத்திரியின் முடிவால் விரக்தி -ஊடகஅமைச்சுப்பதவியை துறக்கிறார் ருவான்?

16shares

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை அடுத்து தனது ஊடக அமைச்சு ராஜாங்கப் பதவியை ராஜினாமா செய்ய ருவான் விஜேவர்தன தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது ஆலோசனையின்றி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை, ரூபவாஹினி தலைவர் பதவிக்கு தாம் நியமித்த ஒருவரை பதவியேற்க விடாமல் செய்தமை உள்ளிட்ட காரணங்களால் அவர் இவ்வாறு ராஜினாம செய்ய தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

எனினும் தனது வசமுள்ள பாதுகாப்பு ராஜாங்க அமைச்சுப்பதவியை அவர் ராஜினாமா செய்யமாட்டாரெனவும் தெரியவருகிறது.