ஸ்ரீலங்கன் விமான சேவை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்; இனி இதை கொண்டு செல்ல முடியாது!

756shares

ஆப்பிள் பயன்முறையில் 15 அங்குல Mac Book Pro சாதனத்தை விமான பயனத்திற்காக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தொிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தினால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள 15 அங்குல Mac Book Pro அலகில், மின்கலம் அதிகளவு வெப்பமாகி தீப்பிடிக்கும் தன்மை காணப்படுவதாக அந்த நிறுவனத்தால் உத்தியோகபூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனுடன் விமான நிலையத்தில் சோதனை நடவடிக்கையின் போது குறித்த சாதனம் தொடா்பில் தகவல்கள் வினவும் போது, மின்கலம் மாற்றப்பட்டுள்ளதாக சாட்சி முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும் என அந்த நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு தொிவித்துள்ளது.

விமான பயணிகளால் கொண்டுவரப்படும் Mac Book Pro சாதனம் பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட முடியாவிடின் அதனை விமான பயணத்திற்காக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...