கிரிக்கெட் நடுவர்களில் இலங்கையரான குமார் தர்மசேனா குறித்து வெளிவந்த ஆச்சர்யம் மிக்க தகவல்

55shares

கிரிக்கெட் நடுவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நபராக இலங்கையைச் சேர்ந்த தர்மசேனாவே இருக்கிறார்.

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நாட்டு அணிக்கு விளையாடுவதை தொடர்ந்து வெளிநாடுகளில் நடக்கும் உள்ளூர் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.

கிரிக்கெட் வீரர்களே இப்படி கோடியில் புரளும் நிலையில், கிரிக்கெட்டிற்கு நடுவராக நிற்கும் அதாவது ICC Elite Panel Umpires நடுவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற டாப் 5 பட்டியல் வெளியாகியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் குமார் தர்மசேனா. இலங்கை அணியின் முன்னாள் வீரரான இவர் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 868 ஓட்டங்களும், 69 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அதே போன்று 141 ஒருநாள் போட்டிகளில் 1222 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

2006-ஆம் ஆண்டு தன்னுடைய ஓய்வுக்கு பின் கிரிக்கெட்டில் நடுவராக முடிவு செய்த இவர், கடந்த 2009-ஆம் ஆண்டு சர்வதேச நடுவராக ஆனார். மேலும், அதிக டி 20 போட்டிகளில் நடுவராக நின்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

நடுவர்களிலே இவர் அதிகம் சம்பளம் வாங்குவதாகவும், கடந்த (2018-2019)-களில் 76,200 (இலங்கை மதிப்பில்1,37,53,338 கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்