தினம் தினம் அச்சத்தின் மத்தியில் உறக்கத்திற்கு செல்லும் யாழ் மக்கள்! நேற்றும் இருவேறு தாக்குதல்கள்!

34shares

யாழில் நேற்று (15) இருவேறு இடங்களில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஐவர் காயமடைந்துள்ளதுடன் வீடுகளின் சொத்துக்களிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

யாழ் கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் முகங்களை மூடியவாறு நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கியதுடன் வீட்டில் இருந்த வயோதிப தம்பதியைினரையும் கடுமையாக தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் கொக்குவில் கிழக்கை சேர்ந்த இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் அரியாலையில் நேற்று இரவு முகத்தை மூடியவாறு வாள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் வீடு ஒன்றிற்குள் நுழைந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டிலுள்ளவர்களை கடுமையாக தாக்கியதில் மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய (15) தினம் இடம்பெற்ற இந்த இருவேறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் கொக்குவில் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் அண்மைக்காலங்களாக இவ்வாறான அடாவடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக இரவு வேளைகளில் முகத்தை மூடிக்கொண்டு ஆயுதங்களுடன் வரும் கும்பல்கள் தாக்குதல்களை நடத்திவிட்டு தப்பி செல்வதால் தினம் தினம் இரவு மக்கள் அச்சத்தின் மத்தியில் படுக்கைக்கு செல்வதாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஐபிசி தமிழின் இன்றை முக்கிய செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வையுடன் இன்னும் பல முக்கிய செய்திகள்...

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்