சிறந்த கலைஞரை இழந்தது முல்லைத்தீவு மண்!

42shares

முல்லைத்தீவு மாவட்டத்தின் முதுபெரும் கலைஞர்களில் ஒருவராக காணப்படும் சிறந்த கலைஞர் ஒருவர் நேற்றைய (15.09.19) தினம் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் வாழ்ந்த சிறந்த தவில் வித்துவானும், சிறந்த நாடக கலைஞருமாக இருந்து, முல்லைமணி அவர்கள் எழுதிய பண்டாரவன்னியன் நாடகத்தில் முதல் முதல் பண்டார வன்னியன் பாத்திரனத்தினை ஏற்று நடித்த சிறந்த நடிகரும், ஆன்மீக பேச்சாளரும், முதன்மையான ஜேதிடரும், முள்ளியவளையில் அமைந்துள்ள சாயீ ஆச்சிரமத்தின் நிறுவுனருமான கலாபூசணம் பட்டம் பெற்றவருமான சு.கணபதிப்பிள்ளை அவர்கள் தனது 83 ஆவது அகவையில் மண்ணை விட்டு பிரிந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கலைஞர்களை உருவாக்கி தனது பிள்ளைகளை கலைத்துறையில் வளர்த்து கலைக்கு பெருமை சேர்ந்த்து சைவநெறியினை வளர்து மண்ணிற்கு பெருமைசேர்த்தவர் சு.கணபதிப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க