ஸ்ரீலங்காவில் பெய்துவரும் கன மழை! சரிந்தது பாரிய மண் திட்டு! ஆபத்தின் விளிம்பில் சில குடும்பங்கள்!

49shares
Image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை பெயலோன் தோட்ட சின்ன சூரிய கந்தப் பிரிவில் பாரிய மண் திட்டொன்று சரிந்துள்ளது.

நேற்று மாலைமுதல் பெய்த கடும் மழையின் காரணமாக இத்திட்டு சரிந்ததாக அப்பிரிவுக்கு பொறுப்பான கிராம சேவையாளர் எஸ்.சுரேஸ் தெரிவித்தார்.

சரிந்துள்ள மண் திட்டுப் பகுதியில் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்ட லயன் தொகுதியொன்று எந்நேரத்திலும் தாழிறங்கலாம் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் எடுத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்காவில் பல இடங்களில் கன மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க