மலர்ந்தது ஆசியாவின் அதிசயம்...! பிரம்மாண்ட திறப்பு விழா!

24shares

கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று (16) பிற்பகல் 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

இத்திறப்பு விழாவில் 45 ரூபா பெறுதியான நினைவு முத்திரையும் இலங்கை தபால் திணைக்களதால் வெளியிடப்பட்டதுடன் தாமரைக் கோபுரத்துக்கான இணையத்தளமும் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி, 50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் என்பவற்றுக்கான வசதிகள் அமையப்பெற்றுள்ளன.

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களுக்கு எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியவாறு தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீற்றராகும்.

இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும். உலகில் 18 ஆவது உயர்ந்த கோபுரமாக இது காணப்படுவதுடன் கொழும்பை அழகுபடுத்தி வானவு உயர்ந்து நிற்கும் பாரிய தொழிநுட்ப கலாசாரத்திற்கு வழிகோலும் தெற்காசியாவில் மிக உயரமான நவீன வசதிகளுடன் கூடியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க