ஆசியாவின் அதிசயமும்... ஸ்ரீலங்காவின் கடனும்...! மைத்திரி கூறியது என்ன?

41shares

பிரமாண்டமான தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்ற கடனை வருடத்திற்கு 240 கோடி ரூபா வீதம் 10 வருடங்களுக்கு நாம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் தாமரைக் கோபுரம் இன்று (16) பிற்பகல் 5 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

1500 வாகனங்கள் நிறுத்தக் கூடிய பாரிய தரிப்பிட வசதி, 50 வானொலி நிலையங்கள், 50 தொலைக்காட்சி நிலையங்கள், 20 தொலைத்தொடர்பு நிலையங்கள் என்பனவற்றுக்கான வசதிகள் இந்த தாமரை கோபுரத்தில் அமையப்பெற்றுள்ளன.

கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களுக்கு எட்டிய தூரத்திலிருந்து தெரிய கூடியவாறு தாமரைக் கோபுரம் அமைந்துள்ளது.

2012 ஆம் ஆண்டில் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தாமரைக் கோபுரத்தின் முழுமையான உயரம் 356.3 மீற்றராகும்.

இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும். உலகில் 18 ஆவது உயர்ந்த கோபுரமாக இது காணப்படுவதுடன் கொழும்பை அழகுபடுத்தி வானவு உயர்ந்து நிற்கும் பாரிய தொழிநுட்ப கலாசாரத்திற்கு வழிகோலும் தெற்காசியாவில் மிக உயரமான நவீன வசதிகளுடன் கூடியதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவிக்கையில்...

தெற்காசியாவின் அதிசயமாக கருதப்படும் தாமரை கோபுரத்தை நிர்மாணிக்கும் பணிக்காக பெருந்தொகை பணத்தை வழங்கிய நிறுவனம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த மஹிந்த ஆட்சியின் போது தாமரை கோபுர நிர்மாணப் பணிக்காக 18 மில்லியன் அமெரிக்க டொலர் முற்பணமாக, சீன நிறுவனம் ஒன்று கொடுத்திருந்தது.

Aerospace Long-March International Trade எனும் பெயர் கொண்ட அட்ரஸ் இல்லாத சீன ஷெல் கம்பனியினால் இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

எனினும் கம்பனி தொடர்பில் ஆராயந்த போது அவ்வாறான கம்பனி ஒன்றே இல்லை என தெரிய வந்துள்ளது.

பிரமாண்டமான இந்த கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்ற கடனை வருடத்திற்கு 240 கோடி ரூபா வீதம் 10 வருடங்களுக்கு நாம் செலுத்த வேண்டும்.

ஆனாலும் நீர்ப்பாசனம், வீடமைப்பு உட்பட பல்வேறு துறைகளில் மகத்தான தொழில்நுட்ப மரபை இலங்கை கொண்டுள்ளது.

தொலைத்தொடர்பாடல், சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாக இந்த கோபுரத்தை குறிப்பிட முடியும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க