ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் ஆலோசனைகள்!

20shares

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக அறித்துவரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முழுமையான ஆதரவு கிடைத்திருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் என்பன குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில் அந்த அறிவிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று சித்த சுயாதீனமற்றவர்களைப் போல குற்றச்சாட்டுக்களை கூறித் திரிவதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவாக செயற்படுகின்ற சோஷலிக மக்கள் முன்னணியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அந்தக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் ஆலோசனைகள் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்