417 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு!

20shares

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்குட்பட்ட 391 மலையக ஆசிரியர் உதவியாளர்கள் உள்ளிட்ட 417 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தலைமையில் இரத்தினபுரி புதிய நகரில் அமைந்துள்ள குமார வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் மூலம் 2015 ஆம் ஆண்டு சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மலையகப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 391 ஆசிரியர் உதவியாளர்களும் இதில் அடங்குகின்றனர்.

இதுதவிர, 26 உதவி தர்மாசிரியர்களுக்கும் இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க