தெற்காசியாவின் அதிசயம் குறித்து மைத்திரி வெளியிட்ட உண்மை! மாயமாகிய 200 கோடி ; விழுங்கியது யார்? 127912

53shares

தெற்காசியாவின் உயரமான கட்டிடமான தாமரைக் கோபுர நிர்மாணத்தில் அப்போதைய அரசாங்கம் 200 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த தாமரைக் கோபுரம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திலும் 200 கோடி ரூபா நிதியை சீன நிறுவனமொன்றின் பெயரில் மோசடிசெய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுர நிர்மாணத்திட்டத்திற்கென 2012 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட எலைய்ட் என்ற சீன நிறுவனத்திற்கு அப்போதைய அரசாங்கம் 200 கோடி ரூபாவை முற்பணமாக வழங்கியது.

அந்த நிறுவனம் 2014ம் ஆண்டு தலைமறைவாகியது. 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்ததென்றே தெரியாமல் போனது.

நாம் விசாரணைகளை மேற்கொண்டபோது சீனாவில் அத்தகைய ஒரு நிறுவனம் செயற்படவில்லை என்ற தகவலே எமக்கு கிடைத்தது.

பீஜிங்கில் உள்ள எமது இலங்கை தூதுவரான கருணாசேன கொடித்துவக்குக்கு இது தொடர்பில் நான் அறிவித்தேன்.

எலையிட் என்ற நிறுவனம் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை தெரிவிக்குமாறு கோரியிருந்தேன்.

அவர் துரிதமாக செயற்பட்டு அவ்வாறு ஒரு நிறுவனம் சீனாவில் கிடையாது என்ற பதிலையே எமக்கு தந்தார் எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்