தமிழர்களுக்காக சிறைக்குச் சென்ற பிரதி அமைச்சர்! கொண்டாடும் தமிழர்கள்

125shares

நீதிமன்ற உத்தரவை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டிருந்த சமூக நலன்புரி பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஆறு பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜர் செய்யப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணை இரண்டின் மூலம் விடுவிக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கங்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார்.

இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை.

சடலத்தை புதைக்க முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர்.

அதையடுத்து அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்தி வைத்தார். இச் சம்பவத்தை பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

இதன் பிரகாரம் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும அடங்கலான சந்தேக நபர்கள் நேற்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தமிழர்களுக்காக இவர் செய்த செயலுக்கு தமிழர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்ததுடன், இவரை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்