பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் களம்! இன்று இரு முக்கிய தரப்பினருக்கிடையிலான சந்திப்பு!

53shares

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளார் என தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நேற்று முன்தினம் சஜித் தரப்பிலிருந்து தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கூட்டமைப்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணில்-கூட்டமைப்பிற்கிடையிலான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு முன்னதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்த கூட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகும் எனவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த கூட்டத்தின் போது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய நிபந்தனைகள், கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்