உயர் நீதிமன்ற பதிவாளரை பதற வைத்த கடிதம்! பாரிய தீவிரவாத நடவடிக்கைக்கான முன்னறிவித்தல்!

37shares

சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஏனைய பல இடங்களிலும் குண்டுகள் வெடிக்குமென உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதமொன்று வந்துள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மேற்கு டெல்லி, மோதிநகா் சுதசன் பார்க் பகுதியைச் சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் எழுதியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பனுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,

நான் சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவன் எனவும், நேரத்துக்கு ஏற்றாற் போல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகா்ந்து செல்வேன் எனவும் தெரிவிக்கப்படடிருந்தது.

அத்துடன் தென் மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கும் அதன் பின் அங்கிருந்து டெல்லிக்கும் இடம் மாறிக் கொண்டேயிருப்பேன் எனவும் தெரிவிக்கப்படடிருந்ததாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதே போன்று எனது தொலைபேசி எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பேன். அந்தவகையில் நான், என்னுடைய மகனுடன் சோ்ந்து இந்த மாதம் 30 ஆம் திகதி, சென்னை உயா்நீதிமன்ற வளாகம் மற்றும் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தை படித்த தலைமைப்பதிவாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக உடனடியாக தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் உயர்நீதிமன்ற பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய வழக்கு பதிவு செய்து, பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருவதாகவும் அந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் தவறாமல் படிங்க
கருணாவின் ஆதரவாளர்களே காட்டுமிராண்டித்தனமாக வெட்டினர்! பகிரங்க வாக்குமூலம்

கருணாவின் ஆதரவாளர்களே காட்டுமிராண்டித்தனமாக வெட்டினர்! பகிரங்க வாக்குமூலம்

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்

13 வருட கால கல்வி தொடர்பில் - கல்வி அமைச்சு எடுக்கவுள்ள முக்கிய தீர்மானம்