மன்னார் நீதிமன்றத்தை அவமதித்த இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

22shares

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தை அவமதித்ததாக இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் நேற்றைய தினம் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. நேற்று காலை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த பொழுது இளைஞன் ஒருவன் நீதிமன்றில் சத்தம் செய்துள்ளார்.

இதை கவனித்த நீதிமன்ற பொலிசார் இவரை கைது செய்து நீதிமன்ற கூண்டக்குள்அடைக்க முற்பட்டபோது இவரின் சத்தம் மீண்டும் அதிகமாக ஒலிக்கவே நீதிபதியின் கட்டளைக்கு அமைவாக இந் நபர் பொலிசாரால் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் இந் நபருக்கு எதிராக பொலிசார் வழக்கு தாக்கல் செய்து நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

விசாரணைகளின் போது குறித்த இளைஞன் போதையில் இருந்ததுடன் தானும் அம்மாவும் கடலை விற்றே பிழைப்பு நடத்துகின்றோம் என மன்றில் சத்தம் போட்டு நீதிபதியிடம் தெரிவித்தார். அதனையடுத்து நீதிபதி அவிசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இளைஞன் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

களத்தில் இறங்கிய ட்ரம்ப்! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்