இலங்கையில் இன்று திருமண பந்தத்தில் இணையவிருந்த ஜோடிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!! பெரும் சோகத்தில் தமிழ் குடும்பம்

1195shares

வவுனியாவில் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையவிருந்த ஜோடி விபத்தில் சிக்கியமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் வவுனியா குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும், யுவதிக்கும் இன்று

(18) திருமணம் நிச்சயிக்கப்பட்டு நடைபெற இருந்த நிலையில், இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றுள்ளனர்.

இருவரும் குருமன்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மணப்பெண் தலையில் பலத்த காயமடைந்துள்ளதுடன், மணமகனுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு பெண்ணும் சிறு காயமடைந்துள்ளதுடன், காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டுள்ளனர்

குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா போக்குவரத்து போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்