ஸ்ரீலங்காவில் குடும்பத்தகராறில் ஏற்பட்ட விளைவு! தொடரும் பொலிஸாரின் தீவிர நடவடிக்கை!

141shares

பேலியகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துட்டகைமுனு மாவத்தையில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்டிருந்த குடும்ப தகராறே இந்த கொலைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கொலை செய்யப்பட்டவர் பேலியகொட பகுதியை சேர்ந்த 31 வயதுடைய பிடிதுவகமகே ஷாந்த குமார என்பவர் எனவும் இனங்காணப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறாத நிலையில், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க