பரந்தனில் விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிவாய்ந்த பொருட்கள்? குவிந்துள்ள மக்கள்!

1924shares

கிளிநொச்சி, பரந்தன்-சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த அகழ்வுப் பணிகள் இன்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தற்போது முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலிகள் தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என்பவற்றை பரந்தன்-சிவபுரம் பகுதியில் புதைத்து வைத்திருந்தனர் என கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய இந்த அகழ்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பகுதியில், இதற்கு முன்னரும் இத்தகையதொரு அகழ்வு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். இருப்பினும் எந்ததொரு பொருட்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருந்தனர் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஆவணங்கள், ஆபரணங்களை தேடி மீண்டும் அகழ்வு பணியை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தினை பார்வையிடுவதற்கு அப்பிரதேச மக்கள் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்

கருணாவுக்கு 35 அடி உயரத்தில் பிரம்மாண்டமான பதாதைகள்