17 பேர்கொண்ட குடும்பமாக வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த குடும்பம்; தமிழர் தலைநகரில் காத்திருந்த சோகம்!

3070shares

கடலில் நீராடிக்கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சோக சம்பவம் திருகோணமலை - குச்சவெளி - புறாத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் 17 பேர்கொண்ட குடும்பமாக இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த நெதர்லாந்து நாட்டவரில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குச்சவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று (20) காலை 10.55 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 73 வயதுடையவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க