வெளிநாடொன்றில் திடீரென கைது செய்யப்பட்ட கிளிநொச்சி நபர்; காரணம் இதுதான்?

1313shares

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் காஞ்சிபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, மாமல்லபுரம் அருகே கோவளத்தை அடுத்த செம்மஞ்சேரி படவட்டம்மன் கோவில் தெருவில் ஒருவரது வீட்டில் தங்கியிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாஸ்போர்ட் விசா போன்ற ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ராஜநாயகம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னர் நீலாங்கரையில் தங்கியிருந்ததாகவும் வார்தா புயலின் போது தன்னுடைய பாஸ்போர்ட், விசா போன்றவை தொலைந்து விட்டதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2009ல் இலங்கையில் இறுதிகட்ட போர் முடிந்தவுடன் சென்னைக்கு தப்பி வந்ததாகவும், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த அவரை கேளம்பாக்கம் பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் தவறாமல் படிங்க