யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நிகழ்ந்த விபத்து; வாகனங்களின் நிலை?!

320shares

கெப் ரக வாகனமும் லொறி ஒன்றும் ஓட்டோவை முன்னும் பின்னுமாக ஒரே சமயத்தில் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 9 மணியளவில், யாழ்ப்பாணம் - கொக்குவில் - குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையாக இடம்பெற்ற இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

லொறியை ஓட்டோ முந்திச் செல்ல முற்பட்டபோதே எதிரே வந்த கெப் வாகனமும் பின்னால் வந்த லொறியும் ஓட்டோவை ஒரே சமயத்தில் மோதியுள்ளன எனத் தெரியவருகிறது.

இந்த விபத்துக் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க