அடிக்கடி மயங்கிவிழுந்த மாணவி: மருத்துவ பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!

1365shares

மாணவியாருவர் இடையிடையே மயக்கமடைந்து வந்தததை அடுத்து தாயுடன் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

சித்தப்பா உறவுமுறை கொண்ட நபருடன் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே குறித்த மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

சந்தேக நபரான சித்தப்பா இன்று (22) கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தில் கர்ப்பம் தரித்துள்ள மாணவி கடந்த காலங்களில் பெரிய நீலாவணையில் தொடர்மாடி குடியிருப்பில் வாழ்ந்துள்ளார்.

இம்மாணவி பெரிய நீலாவணை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று 10 ஆம் தரத்துடன் இடைவிலகியுள்ளார்.

குறித்த நபர் மாணவியுடன் தகாத உறவினை மேற்கொண்டு சந்தேக நபர் தலைமறைவாக இருந்த நிலையில் மல்வத்தை தேவாலயம் ஒன்றிற்கு அருகாமையில் வைத்து இன்று பொலிஸாரினால் கைதானார்.

கைதான சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேக நபர் பாதிக்கப்பட்ட மாணவியின் தாயின் ஒன்றுவிட்ட தங்கையின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க