யாழில் மனைவியுடன் பாசமாக கதைத்துக்கொண்டிருந்த இளம்குடும்பஸ்தருக்கு ஏற்பட்டநிலை!

982shares

மனைவியுடன் பாசமாக கதைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்பஸ்தர் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதும் இடை வழியில் உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

றக்கா வீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த அன்டனி சனோல் (வயது30), என்ற 6 மாத கைக்குழந்தையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

வழமைபோன்று காலை 7 மணியளவில் தேநீர் அருந்திக் கொண்டு மனைவியுடன் உரையாடிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் அவருக்கு உறவினர்கள் முதலுதவி வழங்கியதன் பின்னர் ஓரளவு சுவாசம் பெற்ற நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் மயங்கி விழுந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது இடைவழியில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணைகளை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இதையும் தவறாமல் படிங்க