ஞானசார தேரருக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்!

1077shares

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின் பூதவுடலை தகனம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அத்தோடு, தேரரின் உடலை ஆலயத்திற்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது.

நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த தமிழ் மக்கள் மீது பொலிஸாரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையிலேயே, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு முன்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், முல்லைத்தீவில் இன்றைய தினம் நிகழ்ந்த விடயத்தை இனரீதியாக பார்க்க வேண்டாம் எனவும், இன்று நீதிமன்றில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள், நாட்டின் சட்ட திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு செல்லுபடியாகாது எனும் தொணியில்த்தான் கருத்து வெளியிட்டிருந்தனர் எனவும் தெரிவித்திருந்தார்.

ஞானசார தேரரின் இந்த குற்றச்சாட்டிற்கு பதில் வழங்கும் வகையில் சட்டத்தரணி சுகாஸ், நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லர் என தனது கருத்தை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்