தன்னிடம் முறையிட்டவரையே குழுவாக சேர்ந்து தாக்கிய தலைவர்! யாழில் நடந்தேறிய கொடூரம்

661shares

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டார் என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

தாக்குதலுக்கு உள்ளான நபர், கடந்த வியாழக்கிழமை நண்பகல், மருத்துவபீடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தன்னைப் பற்றி ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவர் தேவையற்ற வித்தத்தில் கதைத்தார் என ஊழியர் சங்கத் தலைவரிடம் வாய் மூலமாக முறைப்பாடு செய்துள்ளார்.

அச்சமயம், முன்னாள் தலைவர், தற்போதைய தலைவர் உட்பட மூவர் தன்னைத் தாக்கினர் எனவும், தாக்குதல் காரணமாக தனது உடலில் உள்காயங்கள் ஏற்பட்டதுடன், கைபேசி உடைந்ததாகவும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதன்போாது மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நோய் நிருணய அட்டையையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, இன்று திங்கட்கிழமை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு இரு தரப்பினரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த விடயம் இரு தரப்பினரும் சமரசத்துக்கு சம்மதம் தெரிவித்தமையைத் தொடர்ந்து முறைப்பாடு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்