மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு!

31shares

லண்டன் அமலன் பவுண்டேஷன் நிதியத்தின் அனுசரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் விளையாட்டுத்துறையில் முதலிடம் பிடித்தவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கில் நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் இளம் இயக்குனர்,நடிகர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவிப்பை மிகவும் சிறப்பாக நடத்திவைத்தனர்.

இந்நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.