முல்லைத்தீவில் பதற்றம்; மாணவன் பலி; ஆத்திரத்தில் குவிந்துள்ள மக்கள்!

1205shares

முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் செல்வரத்தினம் கேதீஸ் வயது 11 என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த மாணவன் தொடர்பில் தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக ஆத்திரமடைந்த மக்கள், பாடசாலை முன்பாக குவிந்துள்ளதோடு, பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவருக்கு சாதகமாக செயற்படுவதாகவும் தெரிவித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதால் கொக்குத்தொடுவாயில் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற கூலர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் உயிரிழந்ததுடன் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க