நிச்சயம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு நேர்ந்த அநியாயம்; கதறி அழும் பெற்றோர்!

667shares

கடந்த 1ஆம் திகதி கம்பளை பிரதேசத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட ஆசிரியரின் சடலம் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பளை பிரதேசத்தில் வசித்து வந்த 27 வயதுடைய ஹட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் சந்திம நிசன்சலா ரத்னாயக்க என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அவரை நிச்சயதார்த்தம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலிலேயே காணாமல் போனதாககுறிப்பிடப்பட்ட ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் தற்போது கம்பளை அடிப்படை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாதுஓய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...