ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஆதரவு யாருக்கு! வெளிவந்தது அறிவிப்பு

225shares

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமை கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.

எனினும், கட்சியின் தீர்மானம் இன்று வரையில் தாமதப்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களின் கூட்டத்தின் பின்னர் கருத்து தெரிவித்த தயாசிறி ஜயசேகர, தாங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...