விடுதலைப் புலிகளின் சீருடை, புலிச் சின்னத்துடனான தொப்பி? யாழ். இளைஞனுக்கு ஏற்பட்ட நிலை!

268shares

விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியை வைத்திருந்தார் என்ற குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா புதியபேருந்து நிலையத்தில் இன்றையதினம் கடமையில் நின்றிருந்த வவுனியா பிராந்திய போதை தடுப்பு பொலிஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அவரிடமிருந்து விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, சீருடை ஒன்றும்(ரீசேட்) மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 25 வயதான யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவரே கைதுசெய்யபட்டதுடன் அவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க