சற்று முன்னர் வெளியானது சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வ முக்கிய அறிவிப்பு!

213shares

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே ஆதரவு தெரிவிப்பதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் தற்போது இடம்பெறும் கட்சியின் ஊடகச் சந்திப்பின் போதே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவி செய்தல், கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குதல் அல்லது மௌனமாக இருத்தல் ஆகிய தீர்மானங்களை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுக்க இருந்ததாகவும், எவ்வாறாயினும் கட்சித் தொண்டர்களின் அடையாளத்தை விற்று செயற்பட முடியாது எனவும் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் சார்பில் சிந்தித்து மக்கள் விரும்பும் முடிவு ஒன்றை எடுக்க வேண்டி இருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதையும் தவறாமல் படிங்க