குடைசாய்ந்த முச்சக்கர வண்டி ஆபத்தான நிலையில் மூவர்!

19shares

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில் கிராமத்தில் முச்சக்கர வண்டியொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த 28, 38, மற்றும் 14 வயதுடைய மூவரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முச்சக்கர வண்டியின் சாரதிக்கும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பகுதியிலிருந்து கந்தளாய் கோவில் கிராமம் பகுதிக்கு உறவினர்களின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியிலே சென்றவர்களே மழை காரணமாக முச்சக்கர வண்டி குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...