எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கணவன் பலி மனைவி படுகாயம்!

33shares

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி உந்துருளி மீது மோதி விபத்திற்குள்ளானதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சீதுவ - கொட்டுகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளதோடு அவரது மனைவி பலத்த காயங்களுடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த உந்துருளி மீது மோதியதன் காரணமாகவே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் 64 வயதுடைய கொட்டுகொட - நெதகமுவ பகுதியில் வசித்து வந்தவரென காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...