ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்கள் இருவர் கைது!

23shares

மாதம்பை சுதுவெல பிரதேசத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாதம்பை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 22 மற்றும் 47 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து குறித்த பிரதேசத்தில் உள்ள வெல்டிங் கடையொன்றில் பணிபுரிந்துள்ளனர் எனவும் கைது செய்யப்பட்ட போது சந்தேக நபர்களிடம் வீஸா இருக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாதம்பை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...