மஹிந்தவுடன் முட்டி மோதிய பிரமுகர் இன்று தம்பியுடன் கூட்டணி!

53shares

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயரும் மேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம். முசம்மிலும் இன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் பல சிறுபான்மை கட்சிகளும், முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டினை அறிவித்துவருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை எதிர்த்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களில் துமிந்த திசாநாயக்கவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு சுதந்திரக்கட்சி ஏகமனதாக ஆதரவு வழங்கியிருந்தது. இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எப்படியாயினும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை எவருக்கு ஆதரவு என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...