விஷேட சுற்றிவளைப்பில் 7 பைக்கற்களுடன் சிக்கிய நபர்!

59shares
Image

முந்தல் கீரியங்கள்ளி பிரதேசத்தில் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

முந்தல் கீரியங்கள்ளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 7 பக்கற்களில் பொதி செய்யப்பட்ட 2 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் ஹெராயின் விற்பனை செய்யும் வியாபாரி எனவும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முந்தல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...