சஜித்திடம் சென்றவர்கள் திடீர் என கோத்தபாயவின் பக்கம்

  • Dias
  • October 09, 2019
417shares

இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று அநுராதபுரத்தில் பிரசார கூட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பிரதி அமைச்சர் பி. ஏக்கநாயக்க, கடந்த வாரம் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வெளிப்படையாக ஆதரவளித்திருந்தார்.

ஆனால் இன்று கோத்தபாயவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளமை அரசியல் பரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பி. ஏக்கநாயக்க தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

மூத்த அர­சி­யல்­வா­தி­க­ளான டபிள்யூ.பி. ஏக்­க­நா­யக்க மற்றும் அத்தா­வுத சென­வி­ரத்ன ஆகியோர் கடந்த வாரம் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...