மாணவிகளுக்கு அதிபரால் நேர்ந்த அவலம் -நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

121shares

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 7 மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பாடசாலையின் அதிபரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக அதிபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டு வந்ததாக குறித்த மாணவிகள் தமது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான அதிபர் நேற்று (08) கைது செய்யப்பட்டு ஹெல்பொட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டவேளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹெல்பொட நீதிமன்ற நீதவான் சாந்தினி மீகொட இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க