மனைவி மரணமடைந்ததை அடுத்து வவுனியா வைத்தியசாலையில் தற்கொலைக்கு முயன்ற கணவன்!

56shares

கடந்த 7 ஆம் திகதி மதியம் குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தீயில் எரிந்து படுகாயமடைந்த நிலையில் , வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றயதினம்(8) சாவடைந்தார்.

குறித்த சம்பவத்தில் வவுனியா புதிய கற்பகபுரம் பகுதியை சேர்ந்த 35வயதான தேவதர்சினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே சாவைடந்தவராவார்.

இதேவளை குறித்த குடும்ப தகராறில் பெண்ணின் கணவன் என கூறப்படும் நபரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது வைத்தியசாலையின் மாடிக்கட்டடத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில் பொலிசாரால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பெண்ணின் மரணம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
loading...