காட்டு யானைகள் அடுத்தடுத்து ஏன் உயிரிழந்தன? வெளிவந்தது அதிர்ச்சி தகவல்

59shares

ஹபரண – தும்பிகுளம் வனப் பகுதியில் 7 காட்டு யானைகள் இறந்தமைக்கான காரணம், விஷ இரசாயன பதார்த்தம் உடலில் கலந்ததுதான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் நியமிக்கப்பட்ட குழு இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

விஷ இரசாயன பதார்த்தங்கள் உடலில் கலந்துள்ளமையே யானைகள் இறந்தமைக்கான காரணம் என குறித்த குழு வழங்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், யானைகளின் உடலில் கலந்துள்ள இரசாயன பதார்த்தம் என்ன என்பது தொடர்பில் கண்டறிந்து கொள்வதற்காக ஆய்வுகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடமும் இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்தி வருகின்றது.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தமது திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் தொடர்பிலான அறிக்கையை விரைவில் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டது,

கர்ப்பம் தரித்த யானைகள் உள்ளிட்ட 7 காட்டு யானைகள் அண்மையில் மர்மமான முறையில் இறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...