கோத்தபாய வழங்கிய முதல் உத்தரவாதம்! மகிழ்ச்சியில் இராணுவத்தினர்

282shares

தவறான குற்றச்சாட்டுக்களில் சிறைவாசம் அனுபவிக்கும் இராணுவத்தினர் அனைவரும் நவம்பர் 17 ஆம் திகதி காலை அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

வரலாற்று பெருமையுடைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ராஜபக்ஷர்கள் எதிரிகள் அல்ல, பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப கைக்கோர்த்துள்ள சுதந்திர கட்சிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

கடந்த அரசாங்கம் தேசிய உற்பத்தியான விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. இலவச உரங்கள், கடனுதவி, காப்புறுதி திட்டங்களை வழங்கியது. எமது நோக்கம் பாரம்பரிய விவசாயத்தை கட்டியெழுப்புவதிலே இலக்காகக் காணப்பட்டது. நாம் வழங்கிய அனைத்தும் நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்குவதற்காக இரத்துசெய்தது.

பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளோம். கல்வியினால் மாத்திரமே நாடு சர்வதேச மட்டத்தில் தலை நிமிர்ந்து இருக்கும். புதிய கற்கை நெறிகளை உள்ளடக்கிய கல்வி முறைமை செயற்படுத்தி இளம் தலைமுறையினருக்கு வழங்குவோம்.

தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி சுதந்திரத்தை அனைவருக்கும் சமவுரிமையாக்குவோம் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இதன்போது கூறினார்.

இந்த அறிவிப்பு இராணுவத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்