முல்லைத்தீவில் 75381 பேர் வாக்களிக்க தகுதி!

15shares

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 75381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்துள்ளார்

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 15 வாக்களிப்பு நிலையங்களில் 5372 பேரும் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 7458 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் 20 வாக்களிப்பு நிலையங்களில் 23626 பேரும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 49 வாக்களிப்பு நிலையங்களில் 24237 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 26 வாக்களிப்பு நிலையங்களில் 11325 பேரும் மணலாறு பிரதேச செயலகப் பிரிவில் 5 வாக்களிப்பு நிலையங்களில் 3363 பெயரும் மொத்தமாக 135 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் 75381 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் தெரிவித்துள்ளார்

அதேபோன்று தபால் மூல வாக்களிப்புக்கான 2845 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்று ஏற்றுக்கொள்ளபட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட ஏற்பாடு குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் தொடர்பாக ஆளணிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான கணக்கெடுப்புகள் இடம்பெறுவதாகவும்

அத்தோடு தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 11 பொலிசார் தேர்தல் முறைப்பாட்டு பிரிவு முல்லைத்தீவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருக்கின்ற சமயத்தில் முறைப்பாடுகளை முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 021 3204351 தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது எனும் 0212290030 தொலைநகல் இலக்கத்திற்கு முறையிடலாம் எனவும் முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்

இதையும் தவறாமல் படிங்க