வரலாற்றில் முதன்முறையாக இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளித் தமிழர்!

115shares

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்த முறை இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழரான சுப்ரமணியம் குணரத்னம் போட்டியிடுகின்றார்.

இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

யார் இந்த சுப்ரமணியம் குணரத்னம்.

பெயர் :- சுப்ரமணியம் குணரத்னம்

பிறந்த திகதி :- 1973.06.05

பிறந்த இடம் :- கொழும்பு

கல்வி தகைமை :- ஆரம்ப கல்வி இலங்கை (பம்பலபிட்டி இந்து கல்லூரி)உயர்நிலை கல்வி – இந்தியா (மதுரை சேதுபதி உயர்நிலை கல்லூரி, தமிழ்நாடு)மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு

தொழில் :- ஊடகவியலாளர் (15 வருட அனுபவம்)

தாயகம் திரும்பிய ஆண்டு :- 1995

இலங்கையில் 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறை காரணமாக, பாதுகாப்பு கருதி சுப்ரமணியம் குணரத்னம் மற்றும் அவரது குடும்பம் தமிழ்நாடு நோக்கி பயணித்துள்ளது.

அங்கு கல்வியை தொடர்ந்த குணரத்னம், 1995ஆம் ஆண்டு மீண்டும் தாயகம் நோக்கி வந்திருந்தார்.

ஜனநாயக உரிமையான வாக்களிப்பை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையிலான பிரசாரத்தை மேற்கொள்ளும் வகையிலேயே தான் இந்த தேர்தலில் போட்டியிட எண்ணியதாக குணரத்னம் குறிப்பிடுகின்றார்.

இலங்கை தமிழர்களின் மறைக்கப்படுகின்ற, மறைக்கப்பட எத்தனிக்கின்ற காரணிகளை வெளிகொணரும் நோக்குடன் இந்த தேர்தலில் களமிறங்கியதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதனை வெளிகொணர தேர்தலில் களமிறங்கினாலேயே நிறைவேற்ற முடியும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் காலத்தில் தனது தந்தை காணாமல் போனதாகவும், இன்று வரை தனது தந்தை காணாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதையும் தவறாமல் படிங்க
loading...