ஜனாதிபதி வேட்பாளரான யாழ். தமிழரின் அதிரடி கருத்து!

709shares

கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் செயலாளருக்கோ, தவிசாளருக்கோ இல்லை என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,கட்சி யாப்புக்கு இணங்க என்னை நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது.

நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்தவுடனேயே கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கட்சி உறுப்பினராக மட்டுமே செயற்படுவேன் என்றும் கட்சியின் மத்திய குழுவுக்கு அறிவித்திருந்தேன்.

அதையும் மீறி கட்சியிலிருந்து என்னை நீக்கிவிட்டதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.

எனினும் உத்தியோகபூர்வமாக எனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை.

அதேவேளை எதிர்வரும் 13ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ள மத்திய குழுக் கூட்டத்துக்கும் கட்சியின் நிர்வாகச் செயலாளர் நித்தியானந்தனினால் எனக்கு அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் என்னைக் கட்சியைவிட்டு விலக்கி விட்டதாக செயலாளரோ அல்லது தவிசாளரோ கூறியதாக செய்திகள் வெளிவருகின்றமை வியப்பாகவுள்ளது.

கட்சியின் யாப்பிற்கிணங்க நான் ஏதாவது குற்றம் இழைத்திருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்ய முடியும் அல்லது இடைநிறுத்த முடியுமே தவிர நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்